Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

பிரேசில் அதிபருக்கு COVID-19 நோய்த்தொற்று

பிரேசில் அதிபருக்கு COVID-19 நோய்த்தொற்று

வாசிப்புநேரம் -
பிரேசில் அதிபருக்கு COVID-19 நோய்த்தொற்று

பிரேசில் அதிபர் ஜாயிர் பொல்ஸோனாரோ (Jair Bolsonaro). கோப்புப் படம்: REUTERS/Adriano Machado

பிரேசிலிய அதிபர் ஜெயீர் போல்சனாரோ (Jair Bolsonaro), COVID-19 நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் அவர் அதனைத் தெரிவித்தார்.

கிருமித்தொற்றை அவ்வப்போது தோன்றும் லேசான சளிக்காய்ச்சல் பாதிப்புடன் ஒப்பிட்டு அதிபர் பேசினார்.

பொது இடங்களில் முகக்கவசம் அணியவேண்டும் என்ற அறிவுரையைத் திரு. போல்சனாரோ தொடர்ந்து மறுத்துவந்தார்.

கடந்த மாத இறுதியில், அவர் கட்டாயமாக முகக்கவசம் அணியவேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்ட பிறகும் அதிபர் அவ்வாறு செய்ய மறுத்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று நோய்வாய்ப்பட்ட திரு. போல்சனாரோவிற்கு அடுத்த நாளே மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டது.

தற்போது, மலேரியாவுக்கு எதிரான hydroxychloroquine மருந்தை உட்கொண்டு வருவதாகக் கூறிய அவர், வாரயிறுதியில் நடந்த சில நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார்.

இம்மாதம் 4ஆம் தேதி நடைபெற்ற அமெரிக்க சுதந்திரதினக் கொண்டாட்டத்தின்போது அவர் பிரேசிலுக்கான அமெரிக்கத் தூதர் டாட் சாப்மேனுடன் (Todd Chapman) நெருங்கிய தொடர்பில் இருந்தார்.

இருவரும் அப்போது முகக்கவசம் அணியாமல் இருந்ததை நிழற்படங்கள் காட்டுகின்றன. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்