Images
  • brazil covid
    படம்: AFP/EVARISTO SA

மூன்றாம் கட்டக் கிருமித்தொற்றை எதிர்நோக்கும் பிரேசில்

பிரேசில், மூன்றாம் கட்ட நோய்ப்பரவலை எதிர்நோக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

கிருமித்தொற்றால் அதிகமான குடியிருப்பாளர்களைப் பறிகொடுத்த நாடுகளில் பிரேசில் முன்னணியில் உள்ளது.

கடந்த வாரம், சராசரியாக நாளொன்றுக்குச் சுமார் 1,600 பேர், அங்கே கிருமித்தொற்றால் மடிந்தனர்.

தடுப்பூசி போடுவதில் ஏற்படும் தாமதத்தாலும் போதுமான கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் இல்லாததாலும், நிலைமை அங்கு மோசமடைந்து வருவதாகக் கூறப்படுகிறது.

சமூக இடைவெளிக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டால், மூன்றாம் கட்டப் பரவல் கடுமையாக இருக்கும் என்று நிபுணர் ஒருவர் எச்சரித்தார்.

காமா, டெல்ட்டா போன்ற வகைக் கிருமிகளால் நோய்ப்பரவல் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

மருத்துவமனைகள், மீண்டும் நோயாளிகளால் நிரம்பி வழியக் கூடுமென வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக, பிரேசிலில்தான் கிருமித்தொற்றால் மாண்டோரின் எண்ணிக்கை ஆக அதிகம்.

அங்கே, 470,000க்கும் அதிகமானோர் பலியாயினர்.

- AFP 

Top