Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

சீனா: பிரேசிலிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட கோழிகளில் கொரோனா கிருமித்தொற்று

சீனாவின் ஷென்சென் நகரின் அரசாங்கம்,பிரேசிலிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட கோழி இறக்கைகளில் கொரோனா கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டதாகத் தெரிவித்துள்ளது.

வாசிப்புநேரம் -
சீனா: பிரேசிலிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட கோழிகளில் கொரோனா கிருமித்தொற்று

(படம்: AFP/Yasuyoshi Chiba)

சீனாவின் ஷென்சென் நகரின் அரசாங்கம்,பிரேசிலிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட கோழி இறக்கைகளில் கொரோனா கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டதாகத் தெரிவித்துள்ளது.

ஷென்சென் சுகாதார அதிகாரிகள், அந்தக் கோழிகளுடன் தொடர்பில் வந்த அனைவருக்கும் கிருமித்தொற்றுச் சோதனை செய்ததாக அது குறிப்பிட்டது.

அவர்களில் யாருக்கும் கிருமித்தொற்று இல்லை.

சீனா, இக்குவடோரிலிருந்து (Ecuador) வந்த இறால்களில் கொரோனா கிருமித்தொற்று இருந்ததாக நேற்றுக் கூறியது.

கடந்த மாதத்திலிருந்து, சீனாவின் துறைமுக நகரங்கள் உட்படப் பல நகரங்களில் கிருமித்தொற்றுச் சம்பவங்கள் பதிவாகின.

அதனால், இக்குவடோரைச் சேர்ந்த 3 இறால் நிறுவனங்களின் இறக்குமதிகள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டன.

சீனாவின் முக்கியத் துறைமுகங்களில் கிருமித்தொற்றுச் சம்பவங்கள் பதிவானதை அடுத்து, அது இறைச்சி, கடல் உணவு ஆகியவற்றை மும்முரமாகச் சோதனை செய்யத் தொடங்கியது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்