Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

பிரேசிலில் தென்னாப்பிரிக்க வகைக் கொரோனா கிருமி - கவலையில் அதிகாரிகள்

பிரேசிலில் தென்னாப்பிரிக்க வகைக் கொரோனா கிருமி முதல்முறையாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -

பிரேசிலில் தென்னாப்பிரிக்க வகைக் கொரோனா கிருமி முதல்முறையாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

அந்த வகைக் கொரோனா கிருமி மிக வேகமாகப் பரவக்கூடியது.

ஏற்கெனவே பிரேசிலில் கட்டுக்கடங்காமல் நோய்த்தொற்று பரவிவருகிறது. தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள புதுவகைக் கிருமியால் நிலைமை மேலும் மோசமடையலாம் என்று அஞ்சப்படுகிறது.

பிரேசிலில் நோய்த்தொற்றால் மரணமடைவோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

அதனால் உடல்களைப் புதைக்க இடமில்லாமல் அதிகாரிகள் திணறுகின்றனர்.

நேற்று முன்தினம் மட்டும் அங்கு 4,195 பேர் மாண்டனர்.

இதுவரை பிரேசிலில் நோய்த்தொற்றுக்கு 340,000க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.

-Reuters

 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்