Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

பிரேஸில் பள்ளியில் துப்பாக்கிச் சூடு - 10 பேர் பலி

பிரேஸில் பள்ளி ஒன்றில் இரண்டு முன்னாள் மாணவர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 5 பதின்ம வயது மாணவர்களும் 2 பள்ளி அதிகாரிகளும் மாண்டனர். 

வாசிப்புநேரம் -
பிரேஸில் பள்ளியில் துப்பாக்கிச் சூடு - 10 பேர் பலி

படம்: REUTERS

பிரேஸில் பள்ளி ஒன்றில் இரண்டு முன்னாள் மாணவர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 5 பதின்ம வயது மாணவர்களும் 2 பள்ளி அதிகாரிகளும் மாண்டனர்.

துப்பாக்கிச் சூட்டை நடத்திய இருவரும் பிறகு தங்களைத் தாங்களே மாய்த்துக் கொண்டனர்.

அந்தத் தாக்குதல்,1999ஆம் ஆண்டு அமெரிக்காவில் இடம்பெற்ற கொலம்பைன் உயர்நிலைப் பள்ளித் துப்பாக்கிச் சூட்டு பாணியில் நடத்தப்பட்டது எனக் காவல்துறை அதிகாரிகள் கூறினர்.

மாண்ட மாணவர்கள் பெரும்பாலும் 15 வயதிலிருந்து 16 வயதிற்கு இடைப்பட்ட ஆண் மாணவர்கள்.

பள்ளியில் நுழைவதற்கு முன் துப்பாக்கிக்காரர்கள் தங்கள் இருவரில் இளையவரின் உறவினரைக் கொன்றுவிட்டு அவரது வாடகைக் கார் நிறுவனத்திலிருந்து ஒரு காரைத் திருடியதாகக் கூறப்பட்டது.
 
விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்