Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

COVID-19: பிரேசிலில் ஒரே நாளில் 27,000 பேருக்குக் கிருமித்தொற்று

COVID-19: பிரேசிலில் ஒரே நாளில் 27,000 பேருக்குக் கிருமித்தொற்று

வாசிப்புநேரம் -
COVID-19: பிரேசிலில் ஒரே நாளில் 27,000 பேருக்குக் கிருமித்தொற்று

(படம்: REUTERS/Amanda Perobelli)

பிரேசிலில், கொரோனா கிருமித்தொற்றால் மாண்டோரின் எண்ணிக்கை, ஸ்பெயினில் மாண்டவர்களின் எண்ணிக்கையை மிஞ்சிவிட்டது.

பிரேசிலில் 28,000 பேர் கிருமித்தொற்றால் மாண்டனர்.

அது, உலக அளவில் ஐந்தாவது ஆக அதிகமான எண்ணிக்கை.

மேலும் முன்னெப்போதும் இல்லாத வகையில், அங்கே ஒரே நாளில், 27,000 பேருக்குக் கிருமித்தொற்று அடையாளம் காணப்பட்டது.

அவர்களையும் சேர்த்து, கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை, 465,000 உயர்ந்துள்ளது.

ஆனால் உண்மையில் அந்த எண்ணிக்கை, 15 மடங்கு அதிகமாக இருக்கக்கூடுமென நிபுணர்கள் நம்புகின்றனர்.

போதுமான சோதனைகள், அங்கே நடத்தப்படவில்லை என்பதை அவர்கள் சுட்டினர்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்