Images
  • malaria drugs
    AFP

COVID-19: பலன் தெரியாத மருந்துகளை சிகிச்சைக்குப் பயன்படுத்த பிரேசில் ஒப்புதல்

பிரேசிலிய சுகாதார அமைச்சு, கொரோனா கிருமித்தொற்றைக் கட்டுப்படுத்த மலேரியா காய்ச்சலுக்கு எதிரான இரண்டு வகை மருந்துகளைப் பயன்படுத்த ஒப்புதல் அளித்துள்ளது.

கொரோனா கிருமியால் பாதிக்கப்பட்ட நோயாளிகளிடம் அந்த மருந்து வேலை செய்யும் என்பதை நிரூபிக்க இதுவரை எந்த ஆதாரமும் இல்லை. இருப்பினும் நோயாளிகளிடம் அந்த மருந்தைப் பயன்படுத்துவதை பிரேசிலிய அதிபர் Jair Bolsonaro ஊக்குவித்து வருகிறார்.

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், hydroxychloriquine என்ற மருந்தைப் பயன்படுத்தி வருவதாகச் சொன்னதை அடுத்து திரு. Bolsonaro அவ்வாறு கூறி வருகிறார். நோய்ப் பரவலுக்கான தொடக்க அறிகுறி தென்படுவோருக்கு அந்த மருந்து கொடுக்கப்படுகிறது.

இருப்பினும், பக்க விளைவுகளுக்குப் பொறுப்பேற்றுக் கையெழுத்திடுவோர் மட்டுமே மருந்தைப் பயன்படுத்த அனுமதிக்கப்படுவர்.
முன்னதாக, உலக சுகாதார நிறுவனம், COVID-19 கொள்ளை நோய்க்கு எதிரான போராட்டத்தில் hydroxychloriquine மருந்தைப் பயன்படுத்தவேண்டாம் என்று எச்சரித்திருந்தது.பிரேசிலிய சுகாதார அமைச்சு, கொரோனா கிருமித்தொற்றைக் கட்டுப்படுத்த மலேரியா  காய்ச்சலுக்கு எதிரான இரண்டு வகை மருந்துகளைப் பயன்படுத்த ஒப்புதல் அளித்துள்ளது.

Top