Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

பிரேசில்: மருத்துவமனையில் தீ

பிரேசிலின் ரியோ டி ஜெனீரோவில் (Rio de Janeiro) உள்ள ஒரு மருத்துவமனையில் ஏற்பட்ட தீயில் ஒருவர் மாண்டார்.

வாசிப்புநேரம் -
பிரேசில்: மருத்துவமனையில் தீ

(படம்: AP)

பிரேசிலின் ரியோ டி ஜெனீரோவில் (Rio de Janeiro) உள்ள ஒரு மருத்துவமனையில் ஏற்பட்ட தீயில் ஒருவர் மாண்டார்.

உடனடியாக வெளியேற்றப்பட்ட நோயாளிகள் தெருக்களில் பாய்களிலும், படுக்கை விரிப்புகளிலும் தற்காலிகமாய் படுக்கவைக்கப்பட்டனர்.

அதேவேளை தீயணைப்பாளர்கள் தீயை அணைப்பதில் கவனம் செலுத்தினர். மீட்கப்பட்டவர்களில் மூத்தோரும் தீவிர சிகிச்சைப் பிரிவைச் சேர்ந்த நோயாளிகளும் அடங்குவர்.

நோயாளிகளில் பலர் வேறு மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். தீ மூண்டதற்கான காரணம் விசாரிக்கப்பட்டு வருகிறது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்