Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

COVID-19 தடுப்பு மருந்து தட்டுப்பாடு - பிரேசில் வெளியுறவு அமைச்சர் பதவி விலகினார்

COVID-19 தடுப்பு மருந்து தட்டுப்பாடு - பிரேசில் வெளியுறவு அமைச்சர் பதவி விலகினார்

வாசிப்புநேரம் -

பிரேஸிலில் COVID-19 தடுப்பு மருந்துக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து, அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் எர்னெஸ்டோ அராஜோ (Ernesto Araujo) பதவி விலகியுள்ளார்.

திரு அராஜோ நோய்ப்பரவலைக் குறைத்து மதிப்பிட்டதாகவும், போதிய தடுப்பு மருந்துகளைப் பெற ஆணை பிறப்பிக்கத் தவறிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

பிரேசிலில் நோய்த்தொற்றால் உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

திரு அராஜோ சீனாவுடன் ஒருங்கிணைந்து பணியாற்றவில்லை என்றும் குறைகூறப்பட்டது.
அதனால் போதுமான தடுப்பு மருந்துகளை பெறுவதில் சிரமத்தை எதிர்நோக்கியதாகக் கூறப்படுகிறது.

53 வயது திரு அராஜோவின் பதவி விலகல் கடிதத்தை ஏற்றுக்கொள்வதா என்று இப்போது, பிரேஸில் அதிபர் ஜயிர் போல்சொனாரோ (Jair Bolsonaro) முடிவெடுக்கவேண்டும்.

திரு அராஜோ அதிபர் போல்சொனாரோவின் நிர்வாகத்தில் முக்கிய நபராகக் கருதப்படுபவர்.

முன்னாள் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் நிர்வாகத்துடன் திரு அராஜோ நெருக்கமாக இருந்தவர்.

-AFP
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்