Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

சில ஆப்பிரிக்க நாடுகள்மீது பயணத்தடை விதிக்க பிரேசில் வேண்டுகோள் - ஏற்க மறுக்கும் அதிபர்

சில ஆப்பிரிக்க நாடுகள்மீது பயணத்தடை விதிக்க பிரேசில் வேண்டுகோள் - ஏற்க மறுக்கும் அதிபர்

வாசிப்புநேரம் -

தென்னாப்பிரிக்காவில் புதுவகை COVID-19 கிருமி அடையாளம் காணப்பட்டுள்ளதையடுத்து சில ஆப்பிரிக்க நாடுகள்மீது பயணத்தடை விதிக்க என்று பிரேசில் சுகாதார அதிகாரிகள் அந்நாட்டு அதிபர் ஜயிர் போல்சொனாரோவிடம் (Jair Bolsonaro) வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அவர்களின் யோசனைக்கு போல்சொனாரோ செவிசாய்க்கவில்லை.

COVID-19 தொடர்பாக போல்சொனாரோ தொடக்கம் முதலே முன்னுக்குப்பின் முரண்பாடாகச் செயல்படுகிறார் என்று பல குற்றச்சாட்டுகள் அவர்மீது உள்ளன.

பயணக்கட்டுப்பாடுகளை விதிப்பதன் மூலம் மட்டுமே கிருமியை நாட்டிற்குள் வரமுடியாமல் தடுத்துவிட முடியுமா என்று போல்சொனாரோ அதிகாரிகளிடம் கேள்வி கேட்டுள்ளார்.

போட்ஸ்வானா (Botswana), எஸ்வாட்டினி (Eswatini), லெசோத்தோ (Lesotho), மொசாம்பிக் (Mozambique), நமிபியா (Namibia), தென்னாப்பிரிக்கா, ஸிம்பாப்வே (Zimbabwe) ஆகிய நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று பிரேசில் சுகாதார அதிகாரிகள் பரிந்துரை செய்துள்ளனர்.

ஐரோப்பிய ஒன்றியம், பிரிட்டன் உள்ளிட்டவை ஏற்கனவே சில ஆப்பிரிக்க நாடுகள்மீது பயணத்தடையை விதித்துவிட்டனர்.

-Reuters 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்