Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

மகள் போல் வேடமிட்டுச் சிறையிலிருந்து தப்பிக்க முயன்ற கைதி தற்கொலை

பிரேசிலில், தமது மகளைப் போல் வேடமிட்டுச் சிறையிலிருந்து தப்பிக்க முயன்ற கைதி, அவரது அறையில் தூக்கிட்டு மாண்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

வாசிப்புநேரம் -

பிரேசிலில், தமது மகளைப் போல் வேடமிட்டுச் சிறையிலிருந்து தப்பிக்க முயன்ற கைதி, அவரது அறையில் தூக்கிட்டு மாண்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

போதைப்பொருள் கடத்திய குற்றத்துக்காகத் தண்டிக்கப்பட்ட அவர், 73 ஆண்டுச் சிறைத் தண்டனையை அனுபவித்து வந்தார்.

சிறையில் தம்மைப் பார்க்க வந்த மகளைப் போல் வேடமிட்டு அவர் சென்றவாரம் தப்பிக்க முயன்று பிடிபட்டார்.

பிளாஸ்டிக் முகக் கவசம், நீண்ட பொய்முடி, பெண்களின் ஆடை என எல்லாவிதத்திலும் ஒரு பெண்ணைப் போல் அவர் வேடமிட்டிருந்தார்.

சிறைத் துறை அதிகாரிகள் முன்னிலையில் அவர் தமது வேடத்தைக் கலைக்கும் காணொளி, இணையத்தில் வேகமாகப் பரவியது.

அவரது மரணம், சிறைத்துறை அதிகாரிகளுக்கு இப்போது தர்மசங்கடத்தை ஏற்படுத்தியிருக்கிறது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்