Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

பிரேசில் - கிருமித்தொற்றால் ஒரே நாளில் 4,000க்கும் மேற்பட்டோர் மரணம்

பிரேசிலில் நேற்று ஒரே நாளில் 4,195 பேர் COVID-19 கிருமித்தொற்றால் மாண்டதாக அந்நாட்டு சுகாதார அமைச்சு தகவல் அளித்துள்ளது. 

வாசிப்புநேரம் -
பிரேசில் - கிருமித்தொற்றால் ஒரே நாளில் 4,000க்கும் மேற்பட்டோர் மரணம்

(படம்: REUTERS/Amanda Perobelli)

பிரேசிலில் நேற்று ஒரே நாளில் 4,195 பேர் COVID-19 கிருமித்தொற்றால் மாண்டதாக அந்நாட்டு சுகாதார அமைச்சு தகவல் அளித்துள்ளது.

அங்கு இதுவரை, சுமார் 337,000 பேர் கிருமித்தொற்றால் மாண்டனர். உலக நாடுகளில், கிருமித்தொற்றால் ஆக மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடுகளில் பிரேசிலும் ஒன்று. அந்தப் பட்டியலில் அது, அமெரிக்காவுக்குப் பின், இரண்டாம் நிலையில் உள்ளது.

அந்நாட்டின் சுகாதார அமைப்பு அண்மைய கிருமித்தொற்றுச் சம்பவங்களின் அதிகரிப்பால் பெருமளவில் பாதிப்படைந்துள்ளது.

பிரேசிலின் மக்கள் தொகையில் 10 விழுக்காட்டினருக்கு மட்டுமே முதல் முறை தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

குறைந்தது 20 நாள்களுக்கு முடக்கநிலையைச் செயல்படுத்துவதே, கிருமிப்பரவலை மெதுவடையச் செய்ய ஒரே வழி எனத் தொற்றுநோய் நிபுணர்கள் நம்புகின்றனர்.

- AFP
 
விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்