Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

பிரேசில்: கிருமித்தொற்றுக்கு ஆளானோர் எண்ணிக்கை 6 மில்லியனைத் தாண்டியது

பிரேசிலில் கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டோர் எண்ணிக்கை 6 மில்லியனைத் தாண்டியுள்ளது.

வாசிப்புநேரம் -

பிரேசிலில் கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டோர் எண்ணிக்கை 6 மில்லியனைத் தாண்டியுள்ளது.

அமெரிக்கா, இந்தியா ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக கிருமித்தொற்றால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள நாடு பிரேசில்.

மாண்டோர் எண்ணிக்கையில் அது அமெரிக்காவுக்கு அடுத்தநிலையில் உள்ளது. 

கிருமித்தொற்றால் பிரேலில் சுமார் 170,000 பேர் மாண்டுவிட்டனர்.

ஜூலை மாதத்துக்குப் பிறகு குறைந்துவந்த கிருமிப் பரவல் இப்போது அங்கு மீண்டும் அதிகரிக்கிறது.

அந்நாட்டில் இரண்டாம் கட்டக் கிருமிப் பரவல் ஏற்பட்டிருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.

கடந்த சில நாள்களில், பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் (Rio de Janeiro) கிருமித்தொற்றுக் காரணமாக மருத்துவமனைகளில் சேர்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

அங்குள்ள பொது மருத்துவமனைகளின் தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் இந்த வாரம் 90 விழுக்காட்டுப் படுக்கைகள் நிரம்பிவிட்டதாகத் தகவல்கள் கூறின. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்