Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

ஐரோப்பிய ஒன்றியத்தைவிட்டு பிரிட்டன் வெளியேறுவது தொடர்பில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது

ஐரோப்பிய ஒன்றியத்தைவிட்டு பிரிட்டன் வெளியேறுவது தொடர்பில் இருதரப்புக்கும் இடையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக அண்மைத் தகவல்கள் கூறுகின்றன.

வாசிப்புநேரம் -
ஐரோப்பிய ஒன்றியத்தைவிட்டு பிரிட்டன் வெளியேறுவது தொடர்பில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது

(படம்: REUTERS/Toby Melville)

ஐரோப்பிய ஒன்றியத்தைவிட்டு பிரிட்டன் வெளியேறுவது தொடர்பில் இருதரப்புக்கும் இடையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக அண்மைத் தகவல்கள் கூறுகின்றன.

நியாயமான, இருதரப்புக்கும் நன்மை பயக்கும் உடன்படிக்கை அது என்று ஐரோப்பிய ஆணையத் தலைவர் ஜான்-குலாட் ஜங்கர் (Jean-Claude Juncker) கூறினார்.

தீர்வுகாண்பதில் இருதரப்பும் கொண்டிருந்த கடப்பாட்டுக்கு அது சாட்சியம் என்றார் அவர்.

பிரெக்சிட் நடைமுறையைத் தொடங்குவதற்கு இது சரியான நேரம் என்றும் திரு. ஜங்கர் குறிப்பிட்டார்.

இவ்வேளையில், பிரிட்டனின் பிரதமர் போரிஸ் ஜான்சன், பிரெக்சிட் தொடர்பில், சிறப்பான புதிய உடன்பாடு காணப்பட்டதாய்க் கூறியிருக்கிறார்.

ஒன்றியத்தை விட்டு வெளியேறும்போது பிரிட்டனுக்கு அது சாதகமாக இருக்குமென்று கருதப்படுகிறது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்