Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

பிரிட்டிஷ் பிரதமர் தெரேசா மேக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம்

பிரிட்டிஷ் பிரதமர் தெரேசா மேக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்படவுள்ளது.

வாசிப்புநேரம் -
பிரிட்டிஷ் பிரதமர் தெரேசா மேக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம்

(படம்: Reuters/Henry Nicholls)

பிரிட்டிஷ் பிரதமர் தெரேசா மேக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்படவுள்ளது.

கன்சர்வேட்டிவ் கட்சியின் குழுத் தலைவர் விரைவில் வாக்கெடுப்பு நடத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்வார்.

ஆனால், தம் வசமுள்ள அனைத்தையும் கொண்டு வாக்கெடுப்பை எதிர்க்கப் போவதாய் திருமதி. மே சூளுரைத்துள்ளார்.

வாக்கெடுப்பில் திருமதி மே தோல்வியுற்றால், திட்டமிட்டபடி அடுத்த ஆண்டு மார்ச் 29ஆம் தேதி பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேற முடியாது.

இந்நிலையில், பிரெக்சிட் உடன்பாடு தொடர்பில் பிரிட்டனுக்குக் கூடுதல் சலுகைகளை வழங்கமுடியாது என்று ஐரோப்பிய ஒன்றியம் கூறியுள்ளது.

ஐரோப்பியத் தலைவர்களையும் ஐரோப்பிய ஒன்றியத்தின் அதிகாரிகளையும் சந்தித்துப் பேசிய திருமதி மேயிடம் அது தெரிவிக்கப்பட்டது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்