Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

ரஷ்யாவில் பல்வேறு நிறங்களில் நாய்களின் உரோமம்...ஏன்?

வெள்ளை நிறத்திலும் கறுப்பு நிறத்திலும் உள்ள நாய்களின் உரோமத்தை நம்மில் பலர் பார்த்திருப்போம்....

வாசிப்புநேரம் -
ரஷ்யாவில் பல்வேறு நிறங்களில் நாய்களின் உரோமம்...ஏன்?

(படம்: REUTERS/Anastasia Makarycheva)

வெள்ளை நிறத்திலும் கறுப்பு நிறத்திலும் உள்ள நாய்களின் உரோமத்தை நம்மில் பலர் பார்த்திருப்போம்....

ஆனால் ரஷ்யாவில் நீல நிறத்திலும் பச்சை நிறத்திலும் நாய்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

அவற்றின் படங்கள் தற்போது ஊடகங்களில் வலம் வருகின்றன.

அது குறித்து BBC செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டது.

நாய்கள் முதன்முதலில் இம்மாதம் 11-ஆம் தேதி தலைநகர் மாஸ்கோவிலிருந்து 370 கிலோமீட்டர் தொலைவில் உள்ள Dzerzhinsk எனும் தொழிற்சொலை வட்டாரத்தில் கண்டுபிடிக்கப்பட்டன.

கைவிடப்பட்ட கண்ணாடித் தொழிற்சொலை ஒன்றுக்கு அருகில் நீல உரோமத்துடன் ஏழு நாய்கள் சுற்றித் திரிந்தன.

மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்ட அவை ஆரோக்கியமான நிலையில் இருப்பதாக BBC குறிப்பிட்டது.

நாய்கள் நீல நிறச் சாயத்தின் தூளில் உருண்டு புரண்டதால் உரோமத்தின் நிறம் மாறியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது.

நேற்று முன்தினம் (பிப்ரவரி 18) பச்சை நிற உரோமத்தைக் கொண்டிருந்த நாய்களும் அடையாளம் காணப்பட்டன.

அவை கைவிடப்பட்ட கிடங்கு ஒன்றுக்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்டன.

கிடங்கில் பச்சை நிறச் சாயத்தின் தூள் அடங்கிய மூட்டைகள் வைக்கப்பட்டிருந்ததாக BBC தெரிவித்தது.

அதனைத் தொடர்ந்து ரஷ்யாவில் ரசாயனத் தூய்மைக்கேடு குறித்த அக்கறைகள் அதிகரித்துள்ளன.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்