Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

2032 கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகளை பிரிஸ்பேன் ஏற்று நடத்தும்

2032 கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகளை ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரம் ஏற்று நடத்தவிருக்கிறது.

வாசிப்புநேரம் -

2032 கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகளை ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரம் ஏற்று நடத்தவிருக்கிறது.

அந்தப் பரிந்துரைக்கு, அனைத்துலக ஒலிம்பிக் குழு ஒப்புதல் வழங்கியுள்ளது.

ஒலிம்பிக் போட்டிகளை ஏற்று நடத்தவிருக்கும் மூன்றாவது ஆஸ்திரேலிய நகரம் பிரிஸ்பேன்.

1956இல் மெல்பர்னும், 2000ஆம் ஆண்டில் சிட்னியும் ஒலிம்பிக் போட்டிகளை ஏற்று நடத்தின.

ஜெர்மனி, கத்தார், இந்தோனேசியா ஆகியவற்றில் உள்ள நகரங்களும் 2032 ஒலிம்பிக் போட்டிகளை ஏற்று நடத்த விருப்பம் தெரிவித்திருந்தன.

ஆனால் அவற்றின் விண்ணப்பங்கள் அனைத்துலக ஒலிம்பிக் குழுவின் ஒப்புதல் நிலைக்குத் தகுதிபெறவில்லை. 

சிங்கப்பூரின் ஒலிம்பிக் கட்டமைப்பாக மீடியாகார்ப், தோக்கியோ 2020 போட்டிகளை மிக விரிவாக உங்களுக்கு வழங்கவிருக்கிறது.
மேல்விவரங்களுக்கு mediacorp.sg/tokyo2020 என்ற இணையத்தளத்தை நாடவும்.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்