Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

பிரிட்டன்: 21 நாடளுமன்ற உறுப்பினர்கள் பதவி நீக்கப்பட்டதைத் தொடர்ந்து மூத்த அமைச்சர் பதவி விலகல்

பிரிட்டன் அரசாங்கத்தைச் சேர்ந்த மூத்த உறுப்பினரான ஏம்பர் ரட் (Amber Rudd) பதவி விலகியுள்ளார்

வாசிப்புநேரம் -
பிரிட்டன்: 21 நாடளுமன்ற உறுப்பினர்கள் பதவி நீக்கப்பட்டதைத் தொடர்ந்து மூத்த அமைச்சர் பதவி விலகல்

(படம்: AFP)

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

பிரிட்டன் அரசாங்கத்தைச் சேர்ந்த மூத்த உறுப்பினரான ஏம்பர் ரட் (Amber Rudd) பதவி விலகியுள்ளார்.

ஆளும் கன்சர்வேட்டிவ் (Conservative) கட்சியின் விசுவாசிகள் நீக்கப்படுவதை பொருத்துக்கொள்ள முடியாமல் தாம் பதவி விலகுவதாக வேலை, ஓய்வு ஊதிய அமைச்சரான திருவாட்டி ரட் கூறினார்.

இவ்வாரத் தொடக்கத்தில் பிரதமர் போரிஸ் ஜான்சன் (Boris Johnson) அவரது கட்சியைச்
சேர்ந்த 21 நாடளுமன்ற உறுப்பினர்களைப் பதவி நீக்கம் செய்தார்.

அவர்கள் எதிர்கட்சிக்கு ஆதரவு நல்கினர் என்பதற்காக பதவி நீக்கம் செய்யப்பட்டனர்.

திருவாட்டி ரட்டின் பதவி விலகல் பிரதமர் ஜான்சனுக்கு, மற்றொரு பெரிய அடியாக கருதப்படுகிறது.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்