Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

தடுப்பூசி போட்டுக்கொண்டோருக்கான அனுமதித் திட்டத்தைக் கைவிட்டது இங்கிலாந்து

தடுப்பூசி போட்டுக்கொண்டோருக்கான அனுமதித் திட்டத்தைக் கைவிட்டது இங்கிலாந்து

வாசிப்புநேரம் -
தடுப்பூசி போட்டுக்கொண்டோருக்கான அனுமதித் திட்டத்தைக் கைவிட்டது இங்கிலாந்து

படம்: AFP / Hollie Adams

இங்கிலாந்தில் COVID-19 தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கான அனுமதித் திட்டம் கைவிடப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சர் சஜித் ஜாவித் (Sajid Javid) தெரிவித்தார்.

BBC செய்தி நிறுவனத்தின் நிகழ்ச்சி ஒன்றில் பேசினார் திரு ஜாவித்.

இங்கிலாந்தில் இரவு நேரக் கேளிக்கைக் கூடங்கள், பெரிய அளவிலான கூட்டங்கள் போன்றவற்றுக்குச் செல்வோருக்காக
COVID-19 அனுமதித் திட்டம் உருவாக்கப்படவிருந்தது.

தடுப்பூசி போட்டால் தான் இரவு நேரக் கேளிக்கைக் கூடங்களில் அனுமதி வழங்கப்படும் என்றால், அது தடுப்பூசி போடாதவர்களை ஒதுக்குவது போல் அமையும் என்று பலர் குறைகூறினர்.

சில நாடாளமன்ற உறுப்பினர்களும் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.

புதிய திட்டம் செயல்படுத்த முடியாத ஒன்று, செலவுமிக்கது, மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தும் என்று அவர்கள் கூறினர்.

அதனால் திட்டத்தைக் கைவிட்டதாக திரு ஜாவித் கூறினார்.

பிரிட்டனில் பெரும்பாலான பெரியவர்கள்
COVID-19 தடுப்பூசியை முழுமையாகப் போட்டுக்கொண்டுள்ளனர்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்