Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

பிரட்டனில் அனைத்துலகப் பயணங்கள் மீண்டும் தொடங்க உதவும் போக்குவரத்துத் திட்டம்

பிரிட்டனில் அனைத்துலகப் பயணங்களை மீண்டும் தொடங்கும் நோக்கில் மிதமான போக்குவரத்துத் திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்படும் என்று அந்நாட்டுப் பிரதமர் போரிஸ் ஜான்சன்  உறுதிப்படுத்தியிருக்கிறார். 

வாசிப்புநேரம் -

பிரிட்டனில் அனைத்துலகப் பயணங்களை மீண்டும் தொடங்கும் நோக்கில் மிதமான போக்குவரத்துத் திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்படும் என்று அந்நாட்டுப் பிரதமர் போரிஸ் ஜான்சன் உறுதிப்படுத்தியிருக்கிறார்.

எனினும் அது எப்போது செயல்படுத்தப்படும் என்று இப்போதே கூறுவது சிரமம் என்றார் அவர்.

இங்கிலாந்தில் COVID-19 கிருமிப் பரவலால் நடப்பிலிருக்கும் கட்டுப்பாடுகள் வரும் 12ஆம் தேதி அடுத்த கட்டமாகத் தளர்த்தப்படும் என்பதைப் பிரதமர் உறுதிப்படுத்தினார்.

பிரிட்டனில் கிருமித்தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்துவருவதாய் அவர் சொன்னார்.

ஆகையால் உணவகங்கள், அத்தியாவசியமற்ற சில்லறை வர்த்தகங்கள், உடற்பயிற்சிக் கூடங்கள் ஆகியவையும் அடுத்த வாரம் மீண்டும் திறக்கப்படலாம். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்