Images
  • british airways
    (கோப்புப் படம்: REUTERS/Matthew Childs)

பிரிட்டனின் அறிவிப்பைத் தொடர்ந்து ஸ்பெயின் விமான நிலையங்களில் குறைந்த போக்குவரத்து நடவடிக்கைகள்

ஸ்பெயின் சென்று திரும்புவோர் தனிமைப்படுத்திக் கொள்ளவேண்டும் என்ற பிரிட்டனின் அறிவிப்பைத் தொடர்ந்து ஸ்பெயின் விமான நிலையங்களில் போக்குவரத்து நடவடிக்கைகள் குறையத் தொடங்கியுள்ளன.

போக்குவரத்தில் எவ்வளவு பாதிப்பு ஏற்பட்டது என்பதை ஸ்பெயின் தெரிவிக்கவில்லை; இருப்பினும் வரும் வாரங்களில் நிலைமை மேம்படும் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

அண்மையில் ஸ்பெயினின் சுற்றுலாத் தலங்களில்
COVID-19 நோய்ப்பரவல் அதிக எண்ணிக்கையில் ஏற்பட்டது.

அதைத்தொடர்ந்து ஸ்பெயின் செல்வோருக்குப் பயண ஆலோசனை விடுத்தது பிரிட்டன்.

ஸ்பெயினுக்கு ஆண்டுதோறும் மில்லியன்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருவார்கள்; அவர்களில் ஐந்தில் ஒரு பகுதியினர் பிரிட்டனிலிருந்து வருபவர்கள்.

ஸ்பெயினின் விமானப்போக்குவரத்து இந்த ஆண்டு
57 முதல் 67 விழுக்காடு வரை குறையக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டது. 

Top