Images
  • british airways (1)
    (படம்:  AFP/Ben STANSALL)

பிரிட்டனுக்குச் செல்வோர் சுயமாகவே 14 நாள்கள் தனிமைப்படுத்திக் கொள்ளவேண்டும்

பிரிட்டனுக்குச் செல்வோர் அடுத்த மாதம் 8ஆம் தேதியிலிருந்து, சுயமாகவே 14 நாள்களுக்குத் தனிமைப்படுத்திக்கொள்ளவேண்டும்.

பிரிட்டிஷ் உள்துறை அமைச்சர் பிரித்தீ பட்டேல் (Priti Patel) அதனைத் தெரிவித்தார்.

வெளிநாடுகளிலிருந்து வருவோர் மூலம் COVID-19 நோய் பரவும் ஆபத்தைக் குறைக்க அந்தப் புதிய நடைமுறை உதவும் என்றார் அவர்.

வெளிநாட்டிலிருந்து செல்வோர் தங்குமிடத்தைத் தெரிவிக்கவேண்டியது கட்டாயம். அந்த இடங்களில் காவல்துறை திடீர்ச் சோதனைகளை நடத்தும்.

விதியை மீறுவோருக்கு 1,200 டாலர் அபராதம் விதிக்கப்படும்.

இருப்பினும், சரக்கு விநியோகச் சேவையில் இருப்போர், கிருமித்தொற்றை எதிர்த்துப் போராடும் மருத்துவ ஊழியர்கள், பண்ணை ஊழியர்கள், அயர்லந்துக் குடியரசிலிருந்து பிரிட்டனுக்குச் செல்வோர் ஆகியோருக்குப் புதிய விதியிலிருந்து விலக்களிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனிமைப்படுத்திக்கொள்ள இடவசதி இல்லாதோர் அரசாங்கத் தங்குமிடங்களை நாடலாம். அதற்கான கட்டணத்தை அவர்கள் செலுத்தவேண்டும்.  

Top