Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

அடுத்த சில மாதங்களுக்குத் தாக்குப்பிடிக்க, தீவிர நடவடிக்கை எடுக்கும் British Airways

British Airways நிறுவனம், அடுத்த சில மாதங்களுக்குத் தாக்குப்பிடிக்க, தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.  

வாசிப்புநேரம் -
அடுத்த சில மாதங்களுக்குத் தாக்குப்பிடிக்க, தீவிர நடவடிக்கை எடுக்கும் British Airways

(கோப்புப் படம்: Reuters / Simon Dawson)

British Airways நிறுவனம், அடுத்த சில மாதங்களுக்குத் தாக்குப்பிடிக்க, தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

நோய்ப்பரவல் காலத்தில் விமானப் பயணங்கள் குறித்த அச்சத்தால் வழக்கநிலை திரும்பும் அறிகுறிகள் தென்படவில்லை என்று நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அலெக்ஸ் குருஸ் தெரிவித்தார்.

நிறுவனத்தின் விமானச்சேவையில் 25 விழுக்காடு மட்டுமே இயங்குவதால் பல்லாயிரம் வேலைகளை நிறுத்தும் கட்டாயம் ஏற்பட்டுள்ளதாய் அவர் கூறினார்.

நிறுவனத்தின் 100 ஆண்டு வரலாற்றில் ஏற்பட்டுள்ள ஆக மோசமான நெருக்கடி இது என்று குறிப்பிட்ட திரு அலெக்ஸ், நிறுவனத்தைக் காப்பாற்ற அரும்பாடுபடுவதாகக் கூறினார்.

பிரிட்டனின் முன்னணி விமான நிறுவனமான British Airways, 13,000 ஊழியர்களை ஆள்குறைப்புச் செய்ததை அரசியல்வாதிகளும் தொழிற்சங்கங்களும் கண்டித்தன.

நாளுக்குச் சுமார் 20 மில்லியன் பவுண்ட் ( 35.1 மில்லியன் வெள்ளி) செலவிடும் நிறுவனம், தனக்கு வேறு வழி தெரியவில்லை என்று கூறியது.

British Airwaysஇன் தலைமை நிறுவனமான IAG, பங்குதாரர்களிடமிருந்து சுமார் 2.74 பில்லியன் யூரோவைத் (4.4பில்லியன் வெள்ளி) திரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்