Images
  • BRITISH AIRWAYS
    (படம்:REUTERS/Neil Hall)

British Airways விமானச் சேவைகளை ரத்து செய்யவுள்ளது

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

British Airways செப்டம்பர் 27-ஆம் தேதி சில விமானச் சேவைகளை ரத்து செய்யத் திட்டமிடுகிறது.

அன்றைய தினம் நிறுவனத்தைச் சேர்ந்த விமானிகள் வேலைநிறுத்தம் செய்யவுள்ளதை முன்னிட்டு British Airways அந்நடவடிக்கை எடுக்கிறது.

பாதிக்கப்படும் பயணிகளுக்குப் பணத்தைத் திருப்பிக்கொடுக்கவும், அவர்களின் பயணத் தேதியைத் தள்ளிப்போடவும், அவர்கள் செல்லும் இடத்தை மாற்றவும் நிறுவனம் முயற்சி செய்கிறது.

இந்த வாரம் British Airways விமானிகள் மேற்கொண்ட 2 நாள் வேலைநிறுத்தத்தால் ஹீத்ரோ விமான நிலையத்திலும் கேட்விக் விமான நிலையத்திலும் 1,700 பயணங்கள் ரத்துசெய்ய நேர்ந்தது.  

Top