Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

British Airways விமானச்சேவைகள் பாதிப்பு

British Airways விமான நிறுவனம், லண்டனிலிருந்து புறப்படும் சில குறுந்தொலைவு விமானச்சேவைகளைத் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ரத்து செய்துள்ளது. 

வாசிப்புநேரம் -
British Airways விமானச்சேவைகள் பாதிப்பு

(படம்: REUTERS/Hannah McKay)

British Airways விமான நிறுவனம், லண்டனிலிருந்து புறப்படும் சில குறுந்தொலைவு விமானச்சேவைகளைத் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ரத்து செய்துள்ளது.

உலகெங்கிலும் உள்ள அதன் விமானச்சேவைகள் பல இதனால் தாமதமடைந்துள்ளன. இணையம் வழி பயணத்தை உறுதி செய்யும் நடைமுறையில் ஏற்பட்ட கோளாறு அதற்குக் காரணம்.

ஆயிரக்கணக்கான பயணிகள், அந்தப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தடங்கலுக்கு விமான நிறுவனம் மன்னிப்பு கேட்டுக்கொண்டது. மேலும் விமான நிலைய நடைமுறைகளுக்கு, வழக்கத்தைவிடக் கூடுதல் நேரம் செலவாகும் என்பதையும் அது தெரிவித்துக்கொண்டது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்