Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

கனடியக் கடற்பகுதியில் சரக்குக் கப்பலில் தீ

கனடியக் கடற்பகுதியில் சென்றுகொண்டிருந்த சரக்குக் கப்பலில் தீ முண்டதாகக் கனடிய கடலோரக் காவற்படை கூறியுள்ளது. 

வாசிப்புநேரம் -

கனடியக் கடற்பகுதியில் சென்றுகொண்டிருந்த சரக்குக் கப்பலில் தீ முண்டதாகக் கனடிய கடலோரக் காவற்படை கூறியுள்ளது.

நிலைமையை மதிப்பிட, அமெரிக்கக் கடலோரக் காவற்படையுடன் இணைந்து அது செயல்படுகிறது.

சுரங்கத்தைத் தோண்டுவதற்கான ரசாயனப் பொருள்கள் கப்பலில் இருந்ததாக நம்பப்படுகிறது. அதில் 10 கொள்கலன்கள் எரிந்துகொண்டிருந்ததாகக் கூறப்பட்டது.

கப்பலில் இருந்த 16 கடலோடிகள் வெளியேற்றப்பட்டனர். கப்பலில் ஐவர் மட்டும் தீயை அணைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டனர்.

கொள்கலன்கள் நெருப்புப் பற்றியபோதும் கப்பலை அது பாதிக்கவில்லை. அதேவேளையில், தீச்சம்பவத்தால் கடலில் விழுந்த 40 கொள்கலன்களைக் கண்டுபிடிக்கும் பணியில் அமெரிக்க, கனடியக் கடலோரக் காவற்படையினர் ஈடுபட்டுள்ளனர்.

அத்தகைய கொள்கலன்கள் கடலோடிகளுக்கு ஆபத்து விளைவிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. ஆதலால், அந்தப் பகுதியிலிருந்து விலகியிருக்குமாறு கடலோடிகள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

கரைகளில் உள்ள மக்களுக்கு எந்தவிதமான ஆபத்தும் இல்லை என்று குறிப்பிடப்பட்டது. நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்படும் எனக் கனடிய கடலோரக் காவற்படை தெரிவித்தது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்