Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

தெரேசா மேயைக் கொல்லச் சதித்திட்டம் - 20 வயது ஆடவர் குற்றவாளி எனத் தீர்ப்பு

பிரிட்டனில், பிரதமர் தெரேசா மேயைக் கொல்வதற்கான சதித்திட்டம் தொடர்பில் 20 வயது ஆடவர் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
தெரேசா மேயைக் கொல்லச் சதித்திட்டம் - 20 வயது ஆடவர் குற்றவாளி எனத் தீர்ப்பு

படம்: REUTERS/Hannah McKay

பிரிட்டனில், பிரதமர் தெரேசா மேயைக் கொல்வதற்கான சதித்திட்டம் தொடர்பில் 20 வயது ஆடவர் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

வடக்கு லண்டனைச் சேர்ந்த நாஇமுர் ரஹ்மான் பயங்கரவாதச் செயல்களுக்குத் தயாராகிவந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டார்.

வெடிபொருளைப் பயன்படுத்தி பிரதமரின் அலுவலகத்துக்குள் நுழைந்து பின்னர் கத்தியால் குத்தியோ, துப்பாக்கியால் சுட்டோ பிரதமர் மேயைக் கொல்வது அவரது திட்டம்.

10 - டௌனிங் ஸ்டிரீட்டில் உள்ள பிரதமரின் அதிகாரபூர்வ இல்லத்தில் அவரது அலுவலகமும் அமைந்திருக்கிறது.

அதன் நுழைவாயிலில் சக்திவாய்ந்த வெடிபொருளை வெடிக்கச் செய்து, அதனால் விளையும் குழப்பத்தைப் பயன்படுத்திப் பிரதமர் அலுவலகத்தில் நுழைந்து கொலை செய்ய ரஹ்மான் திட்டமிட்டிருந்ததாகக் காவல்துறை கூறியது.

டௌனிங் ஸ்டிரீட்டின் ஒரு முனையிலிருந்து, பிரிட்டனின் பிரதமர் இல்லத்தைப் பார்வையிடப் பொதுமக்களும், சுற்றுலாப் பயணிகளும் அனுமதிக்கப்படுவதால் அங்கு பாதுகாப்புப் பணியில் பலர் ஈடுபட்டிருப்பர்.

ரஹ்மானின் சதித்திட்டம் பிரதமர், பாதுகாப்பு அதிகாரிகள், பொதுமக்கள் என்று பலரையும் பாதித்திருக்கும் என்று அதிகாரிகள் கூறினர்.

ரஹ்மான் ஐ.எஸ்.பயங்கரவாத அமைப்பினருடன் பேசுவதாக நினைத்து இணையத்தில் கருத்துகளைப் பரிமாறிக்கொண்டார்.

ஆனால் அவருடன் தொடர்பில் இருந்தது பிரிட்டனின் உளவுப் பிரிவு அதிகாரிகள்.

சென்ற நவம்பர் மாதம், இரகசியப் பிரிவு அதிகாரிகளிடமிருந்து போலியான வெடிபொருட்களைப் பெற்றுக்கொள்ள வந்தபோது ரஹ்மான் கைதுசெய்யப்பட்டார்.

சிரியா சென்று ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பில் இணைந்த உறவினர் ஒருவரின் தூண்டுதலால், கடந்த ஈராண்டாகப் பிரிட்டனில் தாக்குதல் நடத்த ரஹ்மான் திட்டமிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்