Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூர் முதல் பிரிட்டன் வரை - பல நாடுகளுக்குக் கொரோனா கிருமியைக் கொண்டுசென்ற ஆடவர்

சிங்கப்பூரில் வர்த்தகச் சந்திப்பில் நொவல் கொரோனா கிருமியைத் தொற்றிக்கொண்ட ஆடவரிடமிருந்து 11 பேருக்கு நோய் பரவியுள்ளது. இன்றைய சூழ்நிலையில் கிருமி எவ்வளவு எளிதாகப் பரவுகிறது என்பதை அது காட்டியது.

வாசிப்புநேரம் -
சிங்கப்பூர் முதல் பிரிட்டன் வரை - பல நாடுகளுக்குக் கொரோனா கிருமியைக் கொண்டுசென்ற ஆடவர்

(படம்: Handout/ECPAD/AFP)

சிங்கப்பூரில் வர்த்தகச் சந்திப்பில் நொவல் கொரோனா கிருமியைத் தொற்றிக்கொண்ட ஆடவரிடமிருந்து 11 பேருக்கு நோய் பரவியுள்ளது. இன்றைய சூழ்நிலையில் கிருமி எவ்வளவு எளிதாகப் பரவுகிறது என்பதை அது காட்டியது.

சிங்கப்பூரிலிருந்து பிரான்ஸ் சென்ற அந்த ஆடவருக்கு பிரிட்டன் திரும்பிய பின்னரே நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அவரிடமிருந்து கிருமி பரவிய ஐவர் பிரான்சிலும் ஒருவர் ஸ்பெயினிலும் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

சிங்கப்பூர்

ஜனவரி 20 முதல் 22 வரை, கிராண்ட் ஹயட் வர்த்தகச் சந்திப்பில், ஹூபெய் மாநிலத்தைச் சேர்ந்தவர் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோருடன் கலந்துகொண்டார் பிரிட்டிஷ் ஆடவர்.

பிரெஞ்சு மலைப்பகுதி, HAUTE-SAVOIE

ஜனவரி 24 முதல் 28 வரை, பிரெஞ்சு மலைப்பகுதியில் பனிச்சரக்கு உல்லாச விடுதியில் மற்ற இருவருடன் அவர் தங்கியிருந்தார்.

பிரைட்டன், இங்கிலாந்து

பிரைட்டன் திரும்பிய ஆடவருக்குக் கிருமித்தொற்றின் அறிகுறிகள் தோன்றியபோது அவர் மருத்துவமனைக்குச் சென்றார். அது உறுதிசெய்யப்பட்ட பிறகு, தொற்றுநோய்ப் பிரிவுக்கு அவர் மாற்றப்பட்டார்.

அவருடன் பிரான்சில் தொடர்பில் இருந்த ஐவருக்குக் கிருமி தொற்றியது பின்னர் உறுதிசெய்யப்பட்டது.

இங்கிலாந்தில் ஆடவர் சென்ற மதுபானக் கூடத்தின் ஊழியர்கள் சிலரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

பாரிஸ்

பாரிஸில் ஆடவருடன் சம்பந்தப்பட்ட ஐவருடன் தொடர்பில் இருந்த பிரிட்டனைச் சேர்ந்த மேலும் 6 பேரும் மருத்துவமனையில் கண்காணிக்கப்படுகின்றனர்.

பாதிக்கப்பட்ட ஐவரில் ஒருவர் சிறுமி. அவர் சென்ற மூன்று பள்ளிகளில் 100 பேர் கிருமித்தொற்றுக்காக மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். யாருக்கும் கிருமித்தொற்றின் அறிகுறிகள் இதுவரை இல்லை.

ஸ்பெயின்

பிரான்ஸிலிருந்து ஸ்பெயின் திரும்பிய மற்றோர் ஆடவர் நோய் அறிகுறிகளுக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அவரின் மனைவி, பிள்ளைகளுக்கும் பரிசோதனைகள் செய்யப்பட்டன.

உலக அளவில் வேகமாகப் பரவும் ஆற்றல் நொவல் கொரோனா கிருமிக்கு உண்டு என்பதை இந்தச் சம்பவம் காட்டுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்