Images
  • Rejects Brexit
    படம்: HO/PRU/AFP

பிரெக்சிட் வாக்களிப்புக்குப் பிறகு அடுத்த தலைவரைத் தெரிவு செய்ய பிரிட்டிஷ் பிரதமர் உறுதி

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

பிரிட்டிஷ் பிரதமர் தெரேசா மே, பிரெக்சிட் வாக்களிப்புக்குப் பிறகு ஜூன் முதல் வாரத்தில் அடுத்த தலைவரைத் தெரிவு செய்ய உறுதியளித்துள்ளார்.

பிரதமரும், மூத்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் சந்தித்துப் பேசிய பிறகு அந்த முடிவு எடுக்கப்பட்டது.

திருமதி. மே முன்வைத்த பிரெக்சிட் திட்டம் ஏற்கனேவே மூன்று முறை நிராகரிக்கப்பட்டு விட்டது. மீண்டும் அதில் தோல்வியடைந்தால், அவர் பதவியிலிருந்து விலகுவார்.

இதற்கிடையே, கன்சர்வேடிவ் கட்சியின் தலைமைப் பொறுப்புக்குத் தாம் போட்டியிடப் போவதாக முன்னைய வெளியுறவு அமைச்சர் திரு. போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். 

Top