Images
  • Brunson
    (படம்: REUTERS/Osman Orsal)

துருக்கியில் ஈராண்டாகத் தடுத்துவைக்கப்பட்டிருந்த அமெரிக்கப் பாதிரியார் விடுவிப்பு

துருக்கியில் ஈராண்டாகத் தடுத்துவைக்கப்பட்டிருந்த அமெரிக்கப் பாதிரியார் ஆண்டுரு பிரன்சன் (Andrew Brunson) விடுவிக்கப்பட்டுள்ளார்.

அவரை வெள்ளை மாளிகையில் இன்று சந்திக்கவிருப்பதாக அதிபர் டோனல்ட் டிரம்ப் கூறினார்.

துருக்கியில் 2016ஆம் ஆண்டு தோல்வியில் முடிவடைந்த ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியின் பின்னணியில் பாதிரியார் ஆண்டுரு பிரன்சன் செயல்பட்டதாகத் துருக்கி குற்றஞ்சாட்டியது.

அதையடுத்து அமெரிக்காவுக்கும், துருக்கிக்கும் இடையிலான உறவு கசப்படைந்தது.

பாதிரியார் தற்போது விடுவிக்கப்பட்டதால், அமெரிக்கா விதித்திருந்த தடைகள் இனி தளர்த்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், தடுத்துவைக்கப்பட்டுள்ள மேலும் சில அமெரிக்கர்களையும் விரைவில் விடுவிக்கும்படி, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் போம்பெயோ துருக்கியை வலியுறுத்தியுள்ளார்.  

Top