Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

நியூஸிலந்துத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் - மாண்டோருக்குப் பல நாடுகளில் அஞ்சலி

நியூஸிலந்தின் கிரைஸ்ட்சர்ச் நகரில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் மாண்ட 49 பேருக்கு உலகெங்கும் பல நாடுகளில் அஞ்சலி செலுத்தப்படுகிறது.

வாசிப்புநேரம் -
நியூஸிலந்துத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் - மாண்டோருக்குப் பல நாடுகளில் அஞ்சலி

(படம்: AFP / Saeed KHAN)

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

நியூஸிலந்தின் கிரைஸ்ட்சர்ச் நகரில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் மாண்ட 49 பேருக்கு உலகெங்கும் பல நாடுகளில் அஞ்சலி செலுத்தப்படுகிறது.

மாண்டவர்களின் நினைவாக அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தின் சின்னங்களில் ஒன்றான எம்பயர் ஸ்டேட் கட்டடம் நேற்றிரவு அதன் விளக்குகளை அணைத்து வைத்தது.

தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனுதாபம் தெரிவிக்கும் வகையில் ஃபிரான்ஸ் தலைநகர் பாரிசிலும் ஐஃபிள் கோபுரதத்தின் விளக்குகள் நேற்றிரவு அணைக்கப்பட்டிருந்தன.

(படம்: AFP / Geoffroy VAN DER HASSELT)

லண்டனில் உள்ள நியூசிலந்துப் போர் நினைவிடத்தில் பலர் மலர்களையும் செய்திகளையும் விட்டுச் சென்றனர்.

கனடாவின் ஆட்டாவா நகரத்தில் உள்ள அமைதிக் கோபுரத்தின் மேலே கனடியக் கொடி, அரைக் கம்பத்தில் பறக்க விடப்பட்டது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்