Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

உயிருடன் காட்டில் புதைக்கப்பட்ட குழந்தை

7.8 டிகிரி செல்சியஸ் குளிரில் மண், குச்சி ஆகியவற்றுக்கு அடியில் குழந்தை குப்புறப் படுக்கவைக்கப்பட்டிருந்ததாக அதிகாரிகள் கூறினர். 

வாசிப்புநேரம் -


அமெரிக்கா: மொண்டானா மாநிலத்திலுள்ள ஒரு காட்டில் சுமார் 9 மணி நேரம் உயிருடன் புதைக்கப்பட்டிருந்த 5 மாதக் குழந்தை மீட்கப்பட்டதன் தொடர்பில் நேற்று (ஜூலை 10) 32 வயது ஆடவர் மீது ஆபத்து விளைவிக்கக்கூடிய விதத்தில் செயல்பட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

சனிக்கிழமையன்று ஆடவரின் விநோதமான நடவடிக்கை குறித்துக் காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்தது.

லோலோ நீருற்று (Lolo Hot Springs) அருகே இருந்த அந்த ஆடவர் ஆயுதத்தை வைத்திருக்கலாம் என்றும் புகாரில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அங்கு சென்ற காவல்துறையினர் பிரான்சிஸ் கிராவ்லி (Francis Crowley) எனும் அந்த ஆடவரைக் கண்டனர்.

தனது பராமரிப்பில் விடப்பட்டிருந்த குழந்தை மலைப் பகுதியில் எங்கோ புதைக்கப்பட்டிருப்பதாக கிராவ்லி காவல்துறை அதிகாரிகளிடம் கூறியிருக்கிறார்.

6 மணிநேரத் தேடலுக்குப்பின் குழந்தை ஞாயிற்றுக்கிழமை காலை உயிருடன் கண்டுபிடிக்கப்பட்டது.

7.8 டிகிரி செல்சியஸ் குளிரில் மண், குச்சி ஆகியவற்றுக்கு அடியில் குழந்தை குப்புறப் படுக்கவைக்கப்பட்டிருந்ததாக அதிகாரிகள் கூறினர்.

குழந்தையின் அழுகுரல் கேட்டு அதைக் கண்டுபிடித்ததாகவும் அவர்கள் கூறினர்.

குழந்தை நல்ல உடல்நலத்தோடு மருத்துவமனையில் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

ஆடவர் ஆபத்தான விதத்தில் நடந்துகொண்டதாகவும் வயது குறைந்த ஒருவரைத் தாக்கியதாகவும் கிராவ்லி மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

கிராவ்லி நேற்று நீதிமன்றத்தில் அழுது தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தியதாகத் தெரிகிறது.

அவரை மனநலப் பரிசோதனைக்கு அனுப்பும்படி அவரது வழக்குரைஞர் கேட்டுக்கொண்டுள்ளார்.

தான் போதைப்பொருளின் தாக்கத்திலிருந்தபோது குழந்தையைத் தூக்க சோர்வாகயிருந்ததால் அதைக் கீழே வைத்ததாக கிராவ்லி காவல்துறையினரிடம் கூறியிருக்கிறார்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்