Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

இன்ப அதிர்ச்சி தந்த மருமகனைச் சுட்டுக் கொன்ற மாமனார்

அமெரிக்காவின் ஃபுளோரிடா மாநிலத்தில், பிறந்தநாளுக்கு இன்ப அதிர்ச்சி தர விரும்பிய மருமகனைச் சுட்டுக் கொன்ற மாமனார்மீது கொலைக் குற்றம் சுமத்தப்படாது என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

வாசிப்புநேரம் -
இன்ப அதிர்ச்சி தந்த மருமகனைச் சுட்டுக் கொன்ற மாமனார்

(படம்: FACEBOOK/ CHRIS BERGAN)

அமெரிக்காவின் ஃபுளோரிடா மாநிலத்தில், பிறந்தநாளுக்கு இன்ப அதிர்ச்சி தர விரும்பிய மருமகனைச் சுட்டுக் கொன்ற மாமனார்மீது கொலைக் குற்றம் சுமத்தப்படாது என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

நார்வேயிலிருந்து மாமனாரின் பிறந்தநாளுக்கு வந்திருந்தார் 37 வயது கிறிஸ்டோஃபர் பெர்கன் (Christopher Bergan).

61 வயது மாமனார் ரிச்சர்ட் டென்னிஸுக்கு வாழ்த்துச் சொல்ல வீட்டின் பின்புறத்தில் இருந்த புதர்களுக்குப் பின்னாலிருந்து குதித்தார்.

அதிர்ச்சியடைந்த மாமனார், தன்னிச்சையாக மருமகனின் நெஞ்சில் ஒரு முறை சுட்டார்.

சம்பவம் நடக்கும் முன்னர், வீட்டிற்கு முன் மற்றோர் உறவினருடன் கைகலப்பில் ஈடுபட்டிருந்தார் டென்னிஸ்.

காவல்துறையினர் சம்பவத்தை ஒரு விபத்து என்று வகைப்படுத்தியுள்ளனர். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்