Images
  • bush state funeral (1)
    (படம்: AP Photo/Jose Luis Magana)

அமெரிக்க முன்னாள் அதிபர் புஷ்ஷுன் இறுதிச் சடங்கு

அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் H.W. புஷ்ஷுக்கு அரசுமுறை இறுதி மரியாதை செலுத்தும் சடங்கு நடத்தப்பட்டுள்ளது.

வாஷிங்டனில் உள்ள தேசிய தேவாலயத்தில் அது இடம்பெற்றது.

அமெரிக்க முன்னாள் அதிபர்களும், தற்போதைய அதிபர் டோனல்ட் டிரம்பும் இறுதியஞ்சலியில் பங்கேற்றனர்.

திரு. ஜார்ஜ் H.W. புஷ்ஷின் மகனும் முன்னாள் அமெரிக்க அதிபருமான ஜார்ஜ் W. புஷ் புகழுரையாற்றினார்.

திரு. ஜார்ஜ் H.W. புஷ்ஷின் நல்லுடல் டெக்ஸஸில் அடக்கம் செய்யப்படும்.

அமெரிக்காவின் 41ஆவது அதிபராகப் பணியாற்றிய அவர், தமது 94ஆவது வயதில் காலமானார். 

Top