Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

காட்டுத் தீ நிவாரணப் பணிகளுக்கு 50% ஆஸ்திரேலியர்கள் நன்கொடை

ஆஸ்திரேலியாவில் கடந்த சில மாதங்களாக எரிந்துவரும் காட்டுத் தீயை அணைக்கவும், அதற்கான நிவாரணப் பணிகளுக்கு உதவவும் 50 விழுக்காட்டுக்கு மேலான ஆஸ்திரேலியர்கள் நன்கொடை வழங்கியுள்ளனர்.

வாசிப்புநேரம் -
காட்டுத் தீ நிவாரணப் பணிகளுக்கு 50% ஆஸ்திரேலியர்கள் நன்கொடை

(படம்: CNA)

ஆஸ்திரேலியாவில் கடந்த சில மாதங்களாக எரிந்துவரும் காட்டுத் தீயை அணைக்கவும், அதற்கான நிவாரணப் பணிகளுக்கு உதவவும் 50 விழுக்காட்டுக்கு மேலான ஆஸ்திரேலியர்கள் நன்கொடை வழங்கியுள்ளனர்.

FIA என்னும் நிறுவனம் நடத்திய ஆய்வில் அது தெரியவந்தது.

குடிமக்கள் சுமார் 53 விழுக்காட்டினர் நன்கொடை வழங்கியுள்ளனர்.

பலவிதமான வழிகளில் திரட்டப்பட்ட மொத்த நன்கொடையின் அளவு சரிபார்க்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டது.

கடந்த சில நாள்களாக ஆஸ்திரேலியாவில் பெய்த கனத்தமழை, தீயைக் கட்டுக்குள் கொண்டுவர உதவியாக இருந்தது.

இருப்பினும் வரும் வாரங்களில் வெப்பம் அதிகமாக இருக்கும் என்பதால் மீண்டும் தீச் சம்பவங்கள் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

காட்டுத் தீச் சம்பங்களால் இதுவரை 33 பேர் மாண்டனர், ஆயிரக்கணக்கான வீடுகள் நாசமானதோடு மில்லியன் கணக்கான விலங்குகள் மாண்டன.

கிரீஸ் நாட்டின் பரப்பளவுக்கு இணையான நிலப்பரப்பு தீயால் அழிந்தது.

ஒவ்வொரு பருவத்திலும் ஆஸ்திரேலியாவில் காட்டுத் தீ ஏற்படுவது வழக்கமானதுதான். ஆனால் அது இம்முறை கட்டுக்கடங்காமல் பரவி மிகக் கடுமையான சேதத்தை ஏற்படுத்திவருகிறது.
 
விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்