Images
  • newborn babies
    (படம்: AFP/Sutanta Aditya)

உலகளவில் ஐந்தில் ஒரு குழந்தை அறுவைச் சிகிச்சைமூலம் பிறக்கிறது

அறுவைச் சிகிச்சைமூலம் குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளும் விகிதம் சுமார் இரண்டு மடங்காகியுள்ளது.

2000ஆம் ஆண்டுக்கும் 2015ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் அது 12 விழுக்காட்டிலிருந்து 21 விழுக்காட்டிற்கு உயர்ந்தது.

பணவசதி இருப்போரிடம் அறுவைச் சிகிச்சைமுறை அளவுக்கு மீறி பயன்படுத்தப்படுவதாகப் புதிய ஆய்வு கண்டறிந்துள்ளது. வசதிகுறைந்த நாடுகளில் பெண்கள் அதனை நாடுவதில்லை.

அந்த ஆய்வின் முடிவுகள்The Lancet மருத்துவ சஞ்சிகையில் நேற்று(அக்டோபர் 11) வெளியிடப்பட்டன.

குறைந்தது 15 நாடுகளில் 40 விழுக்காட்டிற்கும் அதிகமாகக் குழந்தைகள் அறுவைச் சிகிச்சைமூலம் ஈன்றெடுக்கப்படுகின்றன.

அந்த விகிதம் ஆக அதிகமாக டோமினிகன் குடியரசில் பதிவானது. அங்கு அறுவைச் சிகிச்சைமூலம் சுமார் 60 விழுக்காட்டுக் குழந்தைகள் பிறக்கின்றன.

Top