Images
  • pregnant
    (படம்:Pixabay)

மகப்பேற்றுத் தாதியினுடைய பராமரிப்பின்கீழ் குறைவான அறுவை சிகிச்சைப் பிரசவங்கள்: ஆய்வு

மகப்பேற்று மருத்துவர்களைக் காட்டிலும் மகப்பேற்றுத் தாதியர் கையாளும் அதிக சிக்கலற்ற பிரசவங்களில் பெண்கள் அறுவை சிகிச்சை வழி பிள்ளை பெறும் சாத்தியம் குறைவு என்று அமெரிக்க ஆய்வில் தெரிய வந்துள்ளது.

அமெரிக்காவிலுள்ள 11 மருத்துவமனைகளில் இடம்பெற்ற 23,000க்கும் மேலான பிரசவங்களின் அடிப்படையாகக் கொண்டு அந்த ஆய்வு முடிவு வெளியிடப்பட்டது.

முதல் பிரசவத்துக்காக மருத்துவமனை சென்ற பெண்களுக்கிடையே மகப்பேற்றுத் தாதியினுடைய பராமரிப்பின் கீழ் இருந்தவர்களுக்கு அறுவை சிகிச்சை தேவைப்பட்ட விகிதம் 30 விழுக்காடு குறைவு.

ஏற்கனவே பிள்ளை பெற்ற தாயாரிடையே அந்த விகிதம் 40 விழுக்காடு குறைவு.

ஆய்வின் முடிவுகள் சிக்கலான பிரசவங்களுக்குப் பொருந்தாமல் போகலாம் என்று ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.


 

Top