Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

விமானப் பயணத்தின் போது பெட்டியில் அதிக எடை - புத்திசாலித்தனமாகக் கட்டணம் செலுத்தாமல் தப்பித்த பெண்

விமானப் பயணத்தின் போது கைப்பெட்டியில் (Cabin luggage) சரியான அளவு எடை இருக்க வேண்டும், இல்லையெனில் கூடுதல் எடைக்கான கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.

வாசிப்புநேரம் -
விமானப் பயணத்தின் போது பெட்டியில் அதிக எடை - புத்திசாலித்தனமாகக் கட்டணம் செலுத்தாமல் தப்பித்த பெண்

படம்; FACEBOOK/ Gel Rodriguez

விமானப் பயணத்தின் போது கைப்பெட்டியில் (Cabin luggage) சரியான அளவு எடை இருக்க வேண்டும், இல்லையெனில் கூடுதல் எடைக்கான கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.

இதனால் விமானப் பயணிகள் மிக கவனமாக அவர்களுக்கு வேண்டிய பொருள்களை மட்டுமே பயணத்தின்போது எடுத்துச் செல்வர்.

ஆனால் பிலிப்பீன்ஸில் ஒரு பெண் பயணி கைப்பெட்டியில் 2.5 கிலோகிராம் எடை அதிகமாக இருந்ததையடுத்து புத்திசாலித்தனமாகக் கட்டணம் செலுத்தாமல் தப்பித்துள்ளார்.

ஜெல் ரோட்ரிகூஸ் எனும் அந்தப் பெண், தன்னுடைய பெட்டியில் எடை அதிகமாக இருப்பதைத் தொடர்ந்து, பெட்டியில் வைத்திருந்த ஆடைகளை எடுத்து உடலின்மேல் அணியத்துவங்கினார்.

அதன்மூலம் சுமார் 3 கிலோகிராம் எடையை அவர் குறைத்துள்ளார்.

பல மேல்சட்டைகள், முழுக்கால் சட்டைகளை ஒன்றின்மேல் ஒன்றாக அணிந்து அவர் வேடிக்கையாக ஒரு படத்தையும் Facebook-இல் பதிவு செய்தார்.

அதைத்தொடர்ந்து அந்தப் படம் இணையத்தில் அதிகமாகப் பகிரப்பட்டது.

அதிக எடைக்குக் கூடுதல் கட்டணம் செலுத்தாமல் தாம் தப்பித்தாலும், மீண்டும் இதுபோன்று தாம் செய்யப்போவதில்லை என்று ஜெல் கூறினார்.

எக்கச்சக்கமான ஆடைகளை அணிந்து அதீத வெப்பம் உண்டானதாக அவர் சொன்னார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்