Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

ஓராண்டுக்குள் இருமுறை அறுக்கப்பட்ட கனடியக் கார் கம்பிவடம்

ஓராண்டுக்குள் இராண்டாம் முறை அறுக்கப்பட்ட கார் கம்பிவடம் தொடர்பில் கனடியக் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

வாசிப்புநேரம் -

ஓராண்டுக்குள் இராண்டாம் முறை அறுக்கப்பட்ட கார் கம்பிவடம் தொடர்பில் கனடியக் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

வான்கூவர் நகரின் வடக்கில் அமைந்துள்ள சுற்றுலாத் தலத்தில் கம்பிவடச் சேவை செயல்பட்டுவருகிறது.

கம்பிவடக் கார்ச்சேவை கடல்மட்டத்திலிருந்து 885மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. அதில் 8 பேரை ஏற்றிச் செல்லக்கூடிய 30 கார்கள் உள்ளன.

நேற்று (செப்டம்பர் 14) அதிகாலை 4 மணியளவில் Sea-to-Sky தலத்தின் கம்பிவடம் யாரோ ஒருவரால் அறுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

அப்போது கம்பிவடக் காரில் ஊழியர்களோ, பயணிகளோ இல்லை.

கடந்தாண்டு ஆகஸ்டில் கம்பிவடம் முதன்முறையாக அறுக்கப்பட்டபோது சுமார் 30 கம்பிவடக் கார்கள் விழுந்து சேதமாகின.

பல மில்லியன் டாலர் இழப்பைச் சந்தித்த பின்னர் பிப்ரவரி மாதம் சுற்றுலாத் தலம் மீண்டும் திறக்கப்பட்டது .

கம்பிவடச் சேவை மேம்பட்ட கண்காணிப்புக் கட்டமைப்புடன் திறக்கப்பட்டது.

வாழ்நாளில் ஒரு முறைகூட சிலர் சந்தித்திராத சம்பவத்தைத் தாம் இரு முறை அனுபவித்ததாகச் சுற்றுலாத் தல நிர்வாகி நொந்துகொண்டார்.

கம்பிவடத்தை அறுத்த நபரை அடையாளம் காணும் பணிகள் தொடர்கின்றன.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்