Images
  • cali bar shooting (1)
    (படம்: Twitter/Steinwender)

கலிஃபோர்னியாவின் மதுபானக் கூடத்தில் துப்பாக்கிச் சூடு; குறைந்தது 12 பேர் பலி

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்தின் மதுபானக்கூடத்தில் சற்றுமுன்னர் நடந்த துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 12 பேர் மாண்டதாக அந்நாட்டுக் காவல்துறை கூறியுள்ளது.

மாண்டவர்களில் காவல் அதிகாரியும் அடங்குவார்.

குறைந்தது 10 பேர் காயமடைந்தனர்.

Borderline Bar and Grill மதுபானக் கூடத்தில், துப்பாக்கிச் சூடு நிகழ்ந்தபோது குறைந்தது 200 பேர் உள்ளே இருந்ததாகக் கூறப்பட்டது.

துப்பாக்கிச் சூட்டை நடத்திய ஆடவரைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் காவல் அதிகாரி மாண்டார்.

சம்பவத்தில் குறைந்தது 30 துப்பாக்கிச் சூடுகள் இடம்பெற்றதாக நம்பப்படுகிறது.

துப்பாக்கி சூட்டை நடத்திய அந்த ஆடவரும் மாண்டதாகக் கூறப்பட்டது.

இருப்பினும், அவர் துப்பாக்கிச்சூடு நடத்தியதன் காரணம் என்னவென்று தெரியவில்லை.

அது குறித்த விசாரணை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.






  

Top