Images
  • california shoot
    (படம்:AFP)

கலிஃபோர்னியா துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலை நடத்தியவர் முன்னாள் கடற்படை அதிகாரி

கலிஃபோர்னியா மதுபானக்கூடத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் மாண்டதையடுத்து, அமெரிக்கக் கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளன.

சம்பவத்தில் காவல் துறை அதிகாரியும் மாண்டார்.

குறைந்தது 10 பேர் காயமடைந்தனர்.

Borderline Bar and Grill மதுபானக் கூடத்தில், கல்லூரி மாணவர்களுக்கான நிகழ்ச்சி நடைபெற்றுக்கொண்டிருந்தபோது உள்ளே நுழைந்த துப்பாக்கிக்காரர் கூட்டத்தினரை நோக்கிச் சுட்டார்.

முன்னாள் கடற்படை அதிகாரியான 28 வயது Ian Long, அவ்வாறு சுட்டதாக அடையாளம் காணப்பட்டது.
அவருக்கு மனநலப் பிரச்சினைகள் இருந்ததாய் சந்தேகிக்கப்படுகிறது.

சம்பவத்தில் தன்னைத் தானே சுட்டுக்கொண்டு அவரும் மாண்டதாக நம்பப்படுகிறது.

சம்பவத்தின்போது சுமார் 200 பேர் மதுபானக் கூடத்தில் இருந்ததாகவும் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின்போது அவர்கள் சன்னல்களை நாற்காலிகள் கொண்டு உடைத்துவிட்டு அங்கிருந்து வெளியேறியதாகவும் கூறப்பட்டது.

ஒருசிலர் கழிவறைகளுக்குள் பதுங்கியதாகவும் கூறினர்.

அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் உத்தரவுப்படி, அமெரிக்க அரசாங்கக் கட்டடங்கள், இராணுவத் தளங்கள், கடற்படைக் கப்பல்கள் உள்ளிட்ட பொது-இடங்கள் அனைத்திலும் நாளை வரை தேசியக் கொடி அரைக் கம்பத்தில் பறக்கவிடப்படும்.
 

Top