Images
  • California Divers
    (படம்: REUTERS/Kyle Grillot)

கலிஃபோர்னியா முக்குளிப்புக் கப்பல் தீ விபத்து - விசாரணை தொடங்கியது

கலிஃபோர்னியாவில் முக்குளிப்புக் கப்பல் தீப்பற்றி விபத்துக்குள்ளானதன் தொடர்பில் மாநில அரசாங்கமும் மத்தியப் புலனாய்வுப் பிரிவும் விசாரணையைத் தொடங்கியுள்ளன.

சென்ற வாரம் நடந்த அந்த விபத்தில் 34 பேர் மாண்டனர். அதில் இரண்டு சிங்கப்பூரர்களும் அடங்குவர்.

விபத்துக்குள்ளான கப்பலை இயக்கிய நிறுவனத்துக்குச் சென்ற புலனாய்வு அதிகாரிகள் அங்கு சோதனைகளை நடத்தினர்.

முக்குளிப்புக் கப்பல் தீப்பிடிக்க என்ன காரணம்? நெருப்புப் பரவியதும் கப்பலின் அடித்தளத்தில் இருந்த எவரும் தப்பிச் செல்ல முடியாதது ஏன்? என்பதன் தொடர்பில் விசாரணை நடத்தப்படுகிறது.

முக்குளிப்புக் கப்பல் விபத்தை மத்தியப் புலனாய்வுத்துறை அதிகாரிகள் குற்றச் சம்பவமாக வகைப்படுத்தியுள்ளனர்.
 

Top