Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

கலிஃபோர்னியா கப்பல் தீச்சம்பவம் - பயணிகள் புகையை சுவாசித்ததால் மாண்டிருக்கலாம்

கலிஃபோர்னியக் கடலோரத்தில் தீப்பிடித்து மூழ்கிய Conception எனும் முக்குளிப்புப் படகில் இருந்தவர்கள் புகையை சுவாசித்ததால் மாண்டிருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
கலிஃபோர்னியா கப்பல் தீச்சம்பவம் - பயணிகள் புகையை சுவாசித்ததால் மாண்டிருக்கலாம்

படம்: Ventura County Fire Department/Handout via Reuters

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

கலிஃபோர்னியக் கடலோரத்தில் தீப்பிடித்து மூழ்கிய Conception எனும் முக்குளிப்புப் படகில் இருந்தவர்கள் புகையை சுவாசித்ததால் மாண்டிருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீக்காயங்களால் அவர்கள் மாண்டிருக்கவில்லை என்று சொல்லப்பட்டது.

அதிகாலை நடந்த அந்த விபத்தில் உறங்கி கொண்டிருந்த 34 பேரும் மாண்டனர்.

மாண்டவர்களில் பாதிக்கும் அதிகமானோர் மரபணுச் மரபணுச் சோதனையின்மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இன்னும் ஒரு சடலத்தைத் தேடும் பணி தொடர்கிறது.

மாண்டவர்களில் 26 வயது டான் வெய், 46 வயது டாக்டர் சுனில் சிங் சாந்து  ஆகிய சிங்கப்பூரர்களும் அடங்குவர்.

மாண்டவர்கள் அனைவரும் 17 வயதிலிருந்து 60 வயதுக்குட்பட்டவர்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்