Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

கலிபோர்னியா கப்பல் தீச்சம்பவம்: கடைசி நபரின் உடல் பாகங்கள் மீட்கப்பட்டன

கலிபோர்னியாவில் (California) தீப்பிடித்த முக்குளிப்புப் படகில் இருந்தோரின் உடல் பாகங்கள் அனைத்தும் மீட்கப்பட்டுள்ளன.

வாசிப்புநேரம் -
கலிபோர்னியா கப்பல் தீச்சம்பவம்: கடைசி நபரின் உடல் பாகங்கள் மீட்கப்பட்டன

(படம்: Reuters)

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்

கலிபோர்னியாவில் (California) தீப்பிடித்த முக்குளிப்புப் படகில் இருந்தோரின் உடல் பாகங்கள் அனைத்தும் மீட்கப்பட்டுள்ளன.

கடந்த வாரம் தீப்பிடித்து எரிந்த அந்தப் படகு, கடலில் மூழ்கியதில் 34 பேர் மாண்டனர்.

மோசமான வானிலை காரணமாக இறுதி நபரின் உடல் பாகங்களை மீட்டெடுப்பதற்கான பணிகளில் தாமதம் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

7 பேரை அடையாளம் காண்பதற்காக மரபணுச் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

தீச் சம்பவத்துக்கான காரணம் பற்றி இது வரைத் தகவல் இல்லை என்று அமெரிக்கக் கரையோரப் பாதுகாப்புப் படை கூறியது.

விசாரணைகள் தொடர்கின்றன. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்