Images
  • california fire
    (படம்:AFP/Josh Edelson)

கலிஃபோர்னியா காட்டுத் தீ : 9 பேர் மாண்டனர்

வடக்கு கலிஃபோர்னியா வட்டாரத்தில் வேகமாகப் பரவிவரும் காட்டுத் தீயில் 9 பேர் மாண்டனர்.

150,000க்கும் அதிகமானோர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் மூண்ட தீ வெகு வேகமாகப் பரவியது.

பலத்தக் காற்றினால் பரபரவெனப் பரவிய நெருப்பு மாநிலத்தைச் சூறையாடியது.

நூற்றுக்கணக்கான வீடுகள் தீக்கிரையாயின.

கார்களில் இருந்த ஐவர் தப்பிக்க முடியவில்லை.

அவர்களை நெருப்பு உயிரோடு பொசுக்கியது.

பலத்த காற்றும், வறட்சியான பருவநிலையும் நிலைமையை மேலும் மோசமாக்கக்கூடும்.

ஹாலிவுட் நட்சத்திரங்கள் அதிகம் வாழும் மாலிபூ பகுதியையும் தீ விட்டுவைக்கவில்லை.

கிம் கார்தஷியன், லேடி காகா, வில் சிமித் உட்பட திரை நட்சத்திரங்கள் பலரும் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேற நேர்ந்தது.  

Top