Images
  • Cali fire ph
    படம்: REUTERS

வடக்கு கலிஃபோர்னியாவில் காட்டுத் தீ - நூற்றுக்கணக்கான வீடுகள் தீக்கிரை

வடக்கு கலிஃபோர்னியா வட்டாரத்தில் வேகமாகப் பரவிவரும் காட்டுத் தீயில் சிலர் மாண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நூற்றுக்கணக்கான வீடுகள் தீக்கிரையாயின.

15 மீட்டருக்கும் உயரமான தீச்சுவாலைகளுக்கு அஞ்சி ஆயிரக்கணக்கானோர் வீடுகளிலிருந்து வெளியேறியதாக அதிகாரிகள் கூறினர்.

பலத்த காற்றும், வறட்சியான பருவநிலையும் நிலைமையை மோசமடையச் செய்ததாய்த் தெரிவிக்கப்பட்டது.

பாரடைஸ் (Paradise) நகரில் மருத்துவமனை ஒன்று பாதிக்கப்பட்டதாகவும், ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமுற்றதாகவும் அதிகாரிகள் கூறினர்.

மாண்டோர் குறித்த தகவல் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
  

Top