Images
  • earthquake
    படம்: REUTERS/David McNew

தென் கலிஃபோர்னியாவை உலுக்கிய நிலநடுக்கத்திற்கு ஒருவர் பலி?

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

அமெரிக்க மாநிலமான நெவடாவைச் (Nevada) சேர்ந்த 56 வயது ஆடவர் ஒருவர் தமது ஜீப் (Jeep) வாகனத்துக்கு அடியில் மாண்டுகிடக்கக் காணப்பட்டார்.

அண்மையில் தென் கலிஃபோர்னியாவை உலுக்கிய நிலநடுக்கத்திற்கு அவர் பலியானதாக நம்பப்படுகிறது.

பாராம்ப் (Pahrump) நகரத்தில் அந்த ஆடவரின் உடல் நேற்று  கண்டெடுக்கப்பட்டது.

கடந்த 20 ஆண்டுகளில் ஏற்பட்ட ஆக மோசமான நிலநடுக்கங்களில் ஒன்றாக அது கருதப்படுகிறது.

கடந்த வெள்ளிக்கிழமை மொகாவி (Mojave) பாலைவனத்தை 6.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உலுக்கியது.

அதற்கு மறுநாள் ரிட்ஜ்கிரெஸ்ட் (Ridgecrest) நகரத்தை 7.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உலுக்கியது.

லாஸ் வேகஸ் முதல் லாஸ் ஏஞ்சலிஸ் வரை நில அதிர்வுகள் உணரப்பட்டன.

மாண்டவர் தொடர்பான தனிப்பட்ட விவரங்கள் வெளியிடப்படவில்லை.

நிலநடுக்கத்தால் ஏற்பட்டிருக்கும் முதல் மரணம் அது என்று அதிகாரிகள் நம்புவதாக லாஸ் ஏஞ்சலிஸ் டைம்ஸ் நாளிதழ் தகவல் வெளியிட்டுள்ளது.

இம்மாதம் 3ஆம் தேதி, எரிவாயு நிலையம் ஒன்றில் அந்த ஆடவர் உயிருடன் காணப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அவர் சரிபார்த்துக்கொண்டிருந்த வாகனம், நில அதிர்வு காரணமாக அவர் மீது விழுந்திருக்கும் என்று நம்பப்படுகிறது. 


Top