Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

10,000 மைல் நீளம்கொண்ட மின்-கம்பிகளைப் புதைக்கும் கலிபோர்னியா நிறுவனம்... காரணம்?

அமெரிக்க மாநிலமான கலிபோர்னியாவின் ஆகப் பெரிய எரிசக்தி நிறுவனம், 10,000 மைல் நீளம் கொண்ட மின்சாரக் கம்பிகளைப் புதைக்கவிருக்கிறது. 

வாசிப்புநேரம் -
10,000 மைல் நீளம்கொண்ட மின்-கம்பிகளைப் புதைக்கும் கலிபோர்னியா நிறுவனம்... காரணம்?

REUTERS/Elijah Nouvelage

அமெரிக்க மாநிலமான கலிபோர்னியாவின் ஆகப் பெரிய எரிசக்தி நிறுவனம், 10,000 மைல் நீளம் கொண்ட மின்சாரக் கம்பிகளைப் புதைக்கவிருக்கிறது.

அவற்றில் ஏற்படக்கூடிய கோளாறு, கடுமையான காட்டுத் தீயை உருவாக்கக்கூடியவை என்று Pacific Gas and Electric நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கூறினார்.

2018ஆம் ஆண்டில், கலிபோர்னியாவில் ஆக மோசமான காட்டுத் தீ மூண்டதற்கு அந்த நிறுவனத்தின் மின்சாரக் கம்பிகள் காரணம் என்று குறைகூறப்பட்டது.

காட்டுத்தீயில் 86 பேர் மாண்டனர்.

அவ்வாறு மீண்டும் நடப்பதைத் தவிர்க்க, அந்நிறுவனம் கம்பிகளைப் புதைக்க முடிவுசெய்துள்ளது.

காட்டுத் தீ உண்டாகும் அபாயம் அதிகம் உள்ள 5 மாவட்டங்களில் அவ்வாறு செய்யப்படும்.

அதற்கான பணிகள் இன்று தொடங்கும்.

மின் இணைப்புகளைப் புதைக்கும் பணிகளுக்கான செலவு 10 பில்லியன் டாலருக்கும் அதிகமாக இருக்கலாம்.

பணிகள் முடிவுற 10 ஆண்டுகள் எடுக்கும் என்றும் கூறப்பட்டது.

கலிபோர்னியாவில் ஏற்கனவே சில முறை, மின் கம்பிகளைப் புதைக்கும் இத்தகைய முறை கையாளப்பட்டுள்ளது.

இருப்பினும், இவ்வளவு பெரிய அளவில் திட்டம் கொண்டுவரப்படுவது இதுவே முதன்முறை.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்