Images
  • canada covid
    Reuters

கனடாவில் தடுப்பூசி போட்டுக்கொண்ட பயணிகளுக்குப் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுமா?

கனடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau), COVID-19 தடுப்பூசியை முழுமையாகப் போட்டுக்கொண்டவர்களுக்குப் பயணக் கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது குறித்துப் பரிசீலிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Bloomberg செய்தி நிறுவனம், அதனைத் தெரிவித்தது.

இரண்டு முறை தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ள பயணிகளுக்கான 14-நாள் தனிமைப்படுத்தப்படும் காலத்தைக் குறைக்க, கனடா திட்டமிடுகிறது.

இருப்பினும், தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ள பயணிகள் கனடாவுக்குச் சென்றவுடன், அவர்களுக்குக் கிருமித்தொற்றுப் பரிசோதனை மேற்கொள்ளப்படும்.  

Top