Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

கனடாவில் திடீர் தேர்தல் நடைபெறலாம்

கனடாவில் நோய்ப்பரவல் அதிகரித்து வரும் நிலையில், திடீர் தேர்தல் குறித்து பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau) இன்று அறிவிக்கக்கூடும்.

வாசிப்புநேரம் -

கனடாவில் நோய்ப்பரவல் அதிகரித்து வரும் நிலையில், திடீர் தேர்தல் குறித்து பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau) இன்று அறிவிக்கக்கூடும்.

நாடாளுமன்றத்தைக் கலைக்குமாறு, அவர் ஆளுநரைச் சந்தித்துப் பேசவிருப்பதாகக் கனடாவின் CBC செய்தி நிறுவனம் தெரிவித்தது.

இம்மாதம் 20ஆம் தேதி தேர்தல் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திரு. ட்ரூடோவும் எதிர்கட்சித் தலைவர்களும், கடந்த சில வாரங்களாகத் தேர்தல் பாணியில் அறிவிப்புகளைச் செய்துவருகின்றனர்.

2019இல் மீண்டும் தெரிவு செய்யப்பட்ட, திரு. ட்ரூடோ 6 ஆண்டுகளாகப் பிரதமர் பதவியில் நீடிக்கிறார்.

ஆனால், ஊழல் குற்றச்சாட்டு காரணமாக, இரண்டாம் தவணையில், திரு. ட்ரூடோ பெரும்பான்மை கிடைக்கவில்லை.

-AFP 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்